நடுத்தெருவில் சண்டை! கத்தியால் குத்திய பெண்.. ஆஸ்கர் பட நடிகர் செய்த காரியம்..

A R Rahman Bollywood Hollywood Movies
By Edward Aug 05, 2022 07:20 AM GMT
Report

இந்திய சினிமாவை மையப்படுத்திய ஹாலிவுட் படமாக கடந்த 2008 ஆண்டு இயக்குனர் Danny Boyle இயக்கத்தில் உருவான படம் ஸ்லம்டாக் மில்லியனயர். இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் நடிகர் டேவ் படேல்.

இங்கிலாந்தை சேர்ந்த இந்தியா வம்சாவளி நடிகராக இப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்காக 2 ஆஸ்கர் விருதினை ஏ ஆர் ரகுமான் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த டேவ் படேல், அங்கிருந்த ஒரு கடையின் வெளியே ஆணும் பெண்ணும் சண்டை போட்டு தகராறில் ஈடுபட்டனர். திடீரென அப்பெண் வைத்திருந்த கத்தியால் அந்த ஆணை மார்பில் குத்தியுள்ளார்.

இதைகண்ட டேவ் படேல் இடையில் புகுந்து அவர்களை விலக்கி விட்டு போலிஸாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். சம்பவ இடத்டில் காயம் அடைந்த அந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அப்பெண்ணை கைது செய்தனர்.

நமக்கு என்ன என்று இல்லாமல் இப்படியொரு காரியத்தை செய்த டேவ் படேலை பாராட்டியதோடு விசாரணை செய்தனர் போலிஸார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.