யாராச்சும் காலைல 5 மணிக்கு அதை பண்ணுவாங்களா!! தேவயானியை கலாய்த்த கணவர்..
தமிழ் சினிமாவில் நீ வருவாயா படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ராஜகுமாரன். இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக பணியாற்றி பல வேலைகளை கற்றுக்கொண்டவர். நடிகை தேவயானியை அவர் இயக்கிய அனைத்து படங்களிலும் கதாநாயகியாக நடிக்க வைத்தவர் ராஜகுமாரன்.
இதனால் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு தேவயானி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்றார் தேவயானி. அதன்பின் திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். தேவயானி - ராஜகுமாரனுக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் கணவர் ராஜகுமாரனுடன் அளித்த பேட்டியொன்றில் பல விசயங்களை பகிர்ந்திருக்கிறார் தேவயானி. இட்லி மிஞ்சி போனால் உப்மா செய்தால் அந்த காலத்து பெண்களின் விசயம். ஆனால், காலைல 5 மணிக்கு எந்திருச்சி, இட்லி சுட்டு, அதை ஆரவைத்து உப்மா செய்து புருஷனுக்கு 12 மணிக்கு கொடுக்குறாங்க.
உப்மா மகளுக்கு பிடிக்கும்,11 மணிக்கு உப்மா நான் சாப்பிட்டேன் மீண்டும் 1 மணிக்கு சாப்பிடலாமா என்று கேட்பாங்க என்று ராஜகுமாரன் உப்மா பற்றி கூறியிருக்கிறார். சூடான இட்லியில் கூட உப்மா செய்யலாம் என்று கண்டுபிடிச்சிருக்காங்க தேவயானி என்று காமெடியாக பேசியிருக்கிறார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/57e54c5b-3d08-489a-afff-79f44164c49c/24-65a8c0927ccf1.webp)