அரசியல் சாக்கடைன்னு என் அம்மா சொல்லி விஜய் ஜெயிச்சது!! ராகவா லாரன்ஸ் வைத்த ட்விஸ்ட்..

Raghava Lawrence Rajinikanth Vijay TVK
By Jai Jun 12, 2026 09:45 AM GMT
Report

ராகவா லாரன்ஸ்

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தவெக கட்சியில் இணைந்து திருச்சி கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் ஒரு 10 நிமிட வீடியோவில் பேசி ட்விஸ்ட் வைத்துள்ளார்.

அரசியல் சாக்கடைன்னு என் அம்மா சொல்லி விஜய் ஜெயிச்சது!! ராகவா லாரன்ஸ் வைத்த ட்விஸ்ட்.. | Raghava Lawrence Political Entry Video

அரசியல் சாக்கடை

அந்த வீடியோவில், தலைவர் ரஜினிகாந்த் அரசியல் எண்ட்ரி கொடுத்த போது என் அம்மாவிடம் நானும் அரசியலில் எண்ட்ரி கொடுக்கிறேன் என்று சொன்னேன். அப்போது என் அம்மா, எழுந்து சென்றுவிட்டார். 2, 3 நாட்கள் என்னிடம் பேச மறுத்தார். நான் அரசியலுக்கு வருவதை அம்மா விரும்பவில்லை.

அரசியல் சாக்கடைன்னு என் அம்மா சொல்லி விஜய் ஜெயிச்சது!! ராகவா லாரன்ஸ் வைத்த ட்விஸ்ட்.. | Raghava Lawrence Political Entry Video

அரசியல் சாக்கடை, ரஜினியை பார்த்து இதை சொல்லப் போகிறேன் என்றார். அந்நேரத்தில் கொரோனாவால் எல்லாமே முடங்கிவிட்டது. அப்போது அரசியலுக்கு வரவில்லை என்ற ரஜினிகாந்த் அறிவித்தார். அவ்வளவு தான் தலைமேல் கை வைத்து உட்கார்ந்துவிட்டோம். நான் போய் பேசும்போது, மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை என்று ரஜினி வருத்தப்பட்டார்.

அரசியல் சாக்கடைன்னு என் அம்மா சொல்லி விஜய் ஜெயிச்சது!! ராகவா லாரன்ஸ் வைத்த ட்விஸ்ட்.. | Raghava Lawrence Political Entry Video

அதன்பின் விஜய் அரசியலுக்கு வரேன் என்றார், உடனே ட்ரஸ்ட் சென்று நண்பர் வருகிறார் என கூறி அதற்கான வேலைகளை செய்தேன். விஜய் கடின உழைப்பாளி, அம்மாவிடம் கேட்டேன். அம்மா வேண்டாம் என்று விஜய்யிடம் கூறினார். அதன்பின் தேர்தல் முடிவுகள் வெளியாகி மாற்றத்தை ஏற்படுத்தியது.

உடனே என் அம்மா, விஜய் மாற்றிவிட்டார் என்று கூறினார். அப்போது என்னை அரசியலுக்குள் நுழைய அனுமதி கொடுத்து அம்மா ஓகே சொல்லிவிட்டார். தாய்க்கு நிகராக என் ரசிகர்களை நினைக்கிறேன், நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அந்த தகுதி எனக்கு இருக்கா? என்று நீங்களே கூறுங்கள் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.