என் புருஷனை சந்தானம் மோசமா கலாய்க்கிறார்!! வருத்தப்பட்ட நடிகை தேவயானி..
தேவயானி
90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை தேவயானி. இயக்குநர் ராஜகுமாரனை 2001ல் காதலித்து திருமணம் செய்த தேவயானி 2 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.
திருமணத்திற்கு பின்பும் நடித்து வந்த தேவயானி, 24 ஆண்டுகளாக தங்களது இல்லற வாழ்க்கையில் நிம்மதியாக இருப்பதாகவும் பேட்டிகளில் பகிர்ந்து வந்தார். சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுரம் படத்தில் ராஜகுமாரன் நடித்திருப்பார்.
அப்படத்தில் நகைச்சுவை காட்சியில் நடித்த ராஜகுமாரனை சந்தானம் மோசமாக கலாய்த்திருப்பார். சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை தேவயானி, அந்த காட்சி குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
சந்தானம்
அதில் என் கணவரை சந்தானம் கலாய்த்தது பிடிக்கவில்லை. அது வருத்தம் அளித்தது. சந்தானம் கலாய்த்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, எனக்கு அதி பிடிக்கவில்லை, எனக்கு அந்த விஷயமே பிடிக்கவில்லை. என் கணவர் ஏன் அந்த ரோலில் நடித்தார் என்று கூட எனக்கு தெரியவில்லை.
சந்தானம் படத்தில் நடிக்கிறார் என்றூ தெரியும், ஆனால் இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று எனக்கு தெரியாது, என் கணவர் ஏற்று நடித்துள்ளார், ஆனால் எனக்கு பிடிக்கவில்லை என்று வருத்தத்துடன் நடிகை தேவயானி பகிர்ந்துள்ளார்.