இனியா நல்லா பாடுவா!! இளம் வயது இசையமைப்பாளரிடம் மகளுக்காக வாய்ப்பு கேட்ட தேவயானி..

Devayani Sai Abhyankkar
By Edward Feb 18, 2026 05:30 AM GMT
Report

சாய் அபியங்கர்

இசையமைப்பாளர் அனிருத்திற்கு அடுத்து தற்போது தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருபவர் தான் சாய் அபியங்கர். கட்சி சேர, ஆச கூட, சித்திர புத்திரம் விழி வீக்குர உள்ளிட்ட ஆல்பம் பாடலை இசையமைத்து பாடி அனைவரது கவனத்தை ஈர்த்தார் சாய்.

இனியா நல்லா பாடுவா!! இளம் வயது இசையமைப்பாளரிடம் மகளுக்காக வாய்ப்பு கேட்ட தேவயானி.. | Devayani Chance For Her Daughter From Abhyankkar

இதனையடுத்து பல்டி, டூட் போன்ற படங்களுக்கு இசையமைத்த சாய், கருப்பு, பென்ஸ், மார்ஷல், AA22×A6, டி55 உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைக்க கமிட்டாகி இருக்கிறார்.

நடிகை தேவயானி

இந்நிலையில், பிரபல நடிகை தேவயானி ஒரு மேடையில் சாய் அபியங்கரை பார்த்து பேசியுள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில், முதலில் சாயுடைய அம்மா, அப்பாவுடைய ரசிகை நாங்கள், இப்போது சாயுடைய ரசிகர். என் மகள் இனியா சாய் அபியங்கருடைய ரசிகை, அவள் நல்லா பாடுவா தெரியுமா.

இனியா நல்லா பாடுவா!! இளம் வயது இசையமைப்பாளரிடம் மகளுக்காக வாய்ப்பு கேட்ட தேவயானி.. | Devayani Chance For Her Daughter From Abhyankkar

உங்கள் இசையில் பாடுவது அவளுடைய ஆசை, ஒரு வாய்ப்பு கொடுங்கள். அவள் என்னை கூப்பிட்டு போயிருக்கலாமே என்று கூறுவார். நிறைய படங்கள் பண்ணுங்க, இசை பண்ணுங்க உங்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று தேவயானி கூறியிருக்கிறார்.