முக்கிய நேரத்தில் யாருமே இல்லாமல் கஷ்டப்பட்ட நடிகை தேவயானி

Devayani
By Yathrika Jun 04, 2024 12:00 PM GMT
Report

தேவயானி

தமிழ் சினிமாவில் இருக்கும் நட்சத்திர ஜோடிகளில் ஒரு ஜோடி தேவயானி-ராஜகுமாரன். சூர்யா-ஜோதிகா போன்ற ஜோடியெல்லாம் சேர்வார்கள் என்று ரசிகர்களே கணித்தார்கள். ஆனால் இவர்கள் இணைந்தார்களா என பார்த்த ஜோடிகளில் தேவயானி ராஜகுமாரனை முக்கியமாக கூறலாம். 

அழகாக இருக்கும் தேவயானி ராஜகுமாரனையா திருமணம் செய்வது என பல விமர்சனங்கள் வந்ததாம், ஆனால் ஒரு இடத்தில் கூட தேவயானி அவரது கணவரை விட்டுக்கொடுக்கவில்லையாம். 

அதோடு முதல் குழந்தைக்கு பிப்ரவரி மாதம் தேதி கொடுத்த தேவயானிக்கு 48 நாட்கள் முன்னே பிரசவ வலி ஏற்பட்டதாம். அந்த நேரத்தில் ஒருவர் கூட அவருடன் இல்லையாம். 

தேவயானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்டு பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு தம்பதி மட்டுமே வந்துள்ளனர். அவர்கள் தான் தங்களுக்கு துணையாக இருந்தார்கள் என ராஜகுமாரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

முக்கிய நேரத்தில் யாருமே இல்லாமல் கஷ்டப்பட்ட நடிகை தேவயானி | Devayani First Pregnancy Struggle