தேவயானியால எனக்கு என்ன சப்போர்ட் பண்ண முடியும்!! கணவர் ராஜகுமாரன் ஓபன் டாக்..
ராஜகுமாரன்
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருபவர் நடிகை தேவயானி. இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்த தேவயானி, இரு மகளுக்கு தாயாகி குடும்பத்தினை பார்த்துக்கொண்டார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5ல் இளைய மகள் இனியா, போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார். தற்போது ராஜகுமாரன் இமயா நேச்சுரல்ஸ் என்ற பெயரில் 100 சதவீதம் இயற்கை முறையில் அழகுசாதனப் பொருட்களை உருவாக்கி அவற்றை சந்தைப்படுத்தும் புதிய தொழிலை ஆரம்பித்துள்ளார்.
தேவயானியால எனக்கு என்ன
சமீபத்தில் ராஜகுமாரன் அளித்த பேட்டியொன்றில், தேவயானிக்கு நான் சப்போர்ட்டாக இருக்க வேண்டும். எனக்கு சர்ப்போர்ட்டா இருக்கவா தேவயானி இங்கே வந்தார்கள். தேவயானிக்குத்தான் என் சப்போர்ட் 100 சதவீதம் தேவை, எனக்கு அவங்க சப்போர்ட் தேவையில்லை.

அவர்களால் எனக்கு என்ன சப்போர்ட் பண்ணமுடியும். என் வேலைக்கு அவர்களால் எந்த சப்போர்ட்டும் பண்ணமுடியாது, ஆனா அவர்களுடைய வேலைக்கு என்னால் சப்போர்ட் பண்ணமுடியும். உதாரணத்திற்கு இன்னும் அவங்க ஷூட்டிங் போய் இருக்கிறார்கள்.
இன்னைக்கும் அவங்களுக்கு ஏதாவது அக்ரீமெண்ட் வந்தா, நான் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வேன். அவர்களுக்கு நான் சப்போர்ட் பண்றதால தான், தேவயானின்னு ஒருத்தர் இன்னும் இருக்காங்க, இன்னும் 6 வருடம் கழித்து இமயா நேச்சுரல்ஸ் தேவயானிக்கே சப்போர்ட்டா இருக்கும் என்று ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.