தேவயானி தம்பி என்னை துரோகியாவே பாக்குறான்!! உண்மையை கூறிய கணவர் ராஜகுமாரன்..
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவயானி. பிரபல இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்த தேவயானி, தற்போது சீரியல்களிலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு கணவர் மற்றும் தன் இரு மகள்களுடன் பேட்டியொன்றில் தேவயானி கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்தும் இருந்தார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தேவயானி கணவர் ராஜகுமாரன் அளித்த பேட்டியில், தேவயானியை காதலித்து திருமணம் செய்தப்பின், அவரின் தம்பி நகுல் தன்னிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்று பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதில், இன்று வரையிலும் நகுல், பயங்கரமான தேசத்துரோகம் என்று தான் நினைத்துக்கொண்டு வருகிறார். நாங்கள் திருமணம் செய்த விஷயம் என் அம்மாவுக்கு தெரியாது.
காவல் நிலையத்தில் சென்று பார்த்த போது, அவரை விசாரித்தப்பின் தான் தெரிய வந்தது. அதன்பின் ஒரு வாரம் கழித்து தான் என் வீட்டுக்கு சென்றேன். பெரிதாக தேவயானி கூட நகுல் பேசுறது கிடையாது. அவரவர்கள் செட்டிலாகிவிட்டார்கள் என்று பேசியிருக்கிறார்.
