திருமணத்திற்கு முன் நடிகர் செய்த செயல்!! படப்பிடிப்பில் இயக்குனர் பார்த்திபனை மிரட்டிய தேவயானியின் தயார்!!
தமிழ் சினிமாவில் நீ வருவாயா படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ராஜகுமாரன். இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக பணியாற்றி பல வேலைகளை கற்றுக்கொண்டவர். நடிகை தேவயானியை அவர் இயக்கிய அனைத்து படங்களிலும் கதாநாயகியாக நடிக்க வைத்தவர் ராஜகுமாரன்.
இதனால் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு தேவயானி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்றார் தேவயானி. சமீபத்தில் சித்ரா லட்சுமனன் யூடியூப் சேனல் நிகழ்ச்சிக்கு பேட்டி கொடுத்துள்ள இயக்குனர் ராஜகுமாரன், நீ வருவாய் என படத்தில் இரு ரோல்கள் (அஜித், பார்த்திபன்) யாரை போடலாம் என்று யோசித்தோம்.
அஜித்தை பார்த்து கதை கூறலாம் என்று நானும் தயாரிப்பாளரும் சென்றிருந்தோம். அப்போது அஜித்திற்கு கார் விபத்து ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் படுத்த படுக்கையில் இருந்தார். அஜித் கதையை மீண்டும் மீண்டும் கேட்டு ஓகே கூறிவிட்டார். அடுத்த ரோலுக்கு விஜய் செட்டாகவில்லை என்பதால் பார்த்திபனை நடிக்க கமிட் செய்தோம்.
அப்போது முதல் கட்ட படப்பிடிப்பின் முதல் நாளில் தேவயானியின் அம்மா படத்தில் நடிப்பதை மட்டும் பார்க்க வேண்டும் வேறு எதுவும் செய்யக்கூடாது என்று மிரட்டி இருக்கிறார். அதற்கு காரணம், ஏற்கனவே பார்த்திபனுடன் சில படங்களில் நடித்திருந்தார் தேவயானி. அப்போது டயலாக், மற்றும் காட்சிகளிலுக்கு, பார்த்திபன் அவரே முன் வந்து சில வேலைகளை செய்து கரைக்ஷன் பார்ப்பார்.
பார்த்திபன், ரமேஷ் கண்ணா இருவரும் இயக்குனர் என்பதால் இதில் அப்படியான விஷங்களை இருவரும் செய்யக்கூடாது என்ற நோக்கத்துடன் திட்டியிருந்தார், தேவயானியின் தாயார். அதன்படி பார்த்திபன் என் இயக்கத்திற்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்து, நடித்து கொடுத்தார் என்று இயக்குனர் ராஜகுமாரன் கூறியுள்ளார்.