யுஸ்வேந்திர சாஹல் விவாகரத்து!! காரணத்தை உடைத்த முன்னாள் மனைவி தனஸ்ரீ..
யுஸ்வேந்திர சாஹல் விவாகரத்து
2020 டிசம்பர் 22 ஆம் தேதி யூடியூபர், நடன இயக்குநர் மற்றும் பல் மருத்துவரான தனஸ்ரீ வர்மாவை யுஸ்வேந்திர சாஹல் திருமணம் செய்து கொண்டார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வந்த தன் மனைவியை 4 ஆண்டுகளுக்கு பின் இன்ஸ்டாகிராமில் இருந்து அன்ஃபாலோ செய்துள்ளார் யுவேந்திர சாஹல்.
சட்டரீதியான நடைமுறைகள் அனைத்தும் முடிந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
யுஸ்வேந்திர சாஹல் முன்னாள் மனைவி தனுஸ்ரீ வர்மாவுக்கு 4.75 கோடி ரூபாய் மட்டுமே ஜீவனாம்சமாக கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் தனஸ்ரீ குறித்து பலரும் விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், சாஹலை விவாகரத்து செய்ய என்ன காரணம் என்பதை தனஸ்ரீ முதன்முதலாக வாய்த்திறந்து பேசியுள்ளார்.
தனஸ்ரீ
அவர் கூறுகையில், தனிப்பட்ட வாழ்க்கை என்று நாம் சொல்வதற்கு ஒரு காரணமுள்ளது. ஏனென்றால், அது ரகசியமாக இருக்கவேண்டும். ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருக்கிறது. இரு கை ஓசை தராது, நான் ஒரு விஷயம் பற்றி பேசவில்லை என்பதற்காக பலரும் தங்களுக்கு தெரியாத விஷயத்தை பேசுவதி சரியில்லை.
இதுபோன்று இணையத்தில் பரவும் வதந்திகள் எனக்கு மட்டுமில்லை, யாருக்குமே நடக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதை இனிவரும் கலாத்தில் தெளிவாக கூறுகிறேன்.
வாழ்க்கையில் ஒரு விஷயத்தை கடந்து சென்று பெரிய விஷயங்களை சாதிக்க விரும்பினால், அதை மீண்டும் மீண்டும் பேசத்தேவையில்லை, என் பக்க நியாயம் இருக்கிறது. தீர்ப்பு வழங்கப்பட இருந்தபோது நான் அங்கே நின்றபோது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
மனதளவில் நாங்கள் மிகவும் தயாராக இருந்தபோதிலும், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். எல்லோர் முன்னிலையிலும் நான் அலற ஆரம்பித்தேன். அந்நேரத்தில் நான் என்ன உணர்ந்தேன் என்பதை என்னால் வெளிப்படுத்தக்கூட முடியவில்லை. நான் அழுதுகொண்டே இருந்தேன்.
அலறி அழுதுக்கொண்டே இருந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. நிச்சயமாக அதெல்லாம் நடந்தது, அவர் (சாஹர்) முதலில் வெளியேறினார் என்று தனஸ்ரீ வர்மா தெரிவித்துள்ளார்.