150 கோடியில் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு!! விவாகரத்துக்கு பின் குடும்பத்துடன் குடியேறிய தனுஷ்..

Dhanush Aishwarya Rajinikanth
By Edward Feb 19, 2023 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை பிரிவதாக கூறி தனியாக வாழ்ந்து வந்தார்.

மனைவியை பிரிவதற்கு முன் போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினிகாந்த் வீட்டிற்கு பக்கத்திலேயே கோடி மதிப்பில் நிலத்தை வாங்கி 150 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீட்டினை கட்டி வந்தார்.

150 கோடியில் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு!! விவாகரத்துக்கு பின் குடும்பத்துடன் குடியேறிய தனுஷ்.. | Dhanush 150 Crores New House Warming Function

இதற்கிடையில், ஐஸ்வர்யாவுடன் தனுஷ் சேர்ந்து வாழலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மனைவியை பிரிந்து ஒரு வருடமாகியும் அது பற்றி எதுவும் கூறாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் தன் குடும்பத்தினருடன் 150 கோடி செலவில் உருவாகிய வீட்டிற்கு குடிபுகுந்துள்ளனர். இன்று நடைபெற்ற கிரஹபிரவேச நிகழ்ச்சியில் அவரது தந்தை தாயுடன் பூஜை செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்நிகழ்வில் தனுஷின் மகன்கள் யாத்ரா, லிங்கா உடன் இல்லாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

GalleryGallery