விவாகரத்துக்கு பின் இரண்டாம் திருமணம் வேண்டவே வேண்டாம்!! செல்வராகவனிடம் தனுஷ் கூறியது இதுதான்..
தமிழ் சினிமாவில் அண்ணன் - தம்பி இருவரும் கொடிக்கட்டி பறந்த நட்சத்திரங்களில் முக்கியமானவர்கள் செல்வராகவன் - தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் இயக்குனராக செல்வராகவனும் நடிகராக தனுஷும் அறிமுகமாகினார்கள்.
அதன்பின் இருவரும் தங்கள் கேரியரில் கவனம் செலுத்தி மிகப்பெரிய இடத்தினை பிடித்து கொடிக்கட்டி பறந்து வந்தனர். யார் செய்த சாபமோ, செல்வராகவன் சோனியா அகர்வாலை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார்.

பின் கீதாஞ்சலியை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தனுஷும் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் செல்வராகவன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சோனியா அகர்வாலை விவாகரத்து செய்தபின் மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இரு, கடவுள் உனக்கு நல்ல ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கிறார் என்று கூறினார்.
ஆனால் கீதாஞ்சலி மீது இருந்த நம்பிக்கையால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார் செல்வராகவன்.