தனுஷ் சரளமாக தெலுங்கு பேசுவாரா? ஹாலிவுட் அடுத்து மீண்டும் அக்கடதேசத்துக்கு போறாராம்!

tollywood dhanush
By Edward Jul 27, 2021 03:02 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் பல எதிர்ப்புகளை சந்தித்து வந்த தனுஷ் தற்போது ஹாலிவுட் நடிகர் என்ற பெருமையை தமிழ் சினிமாவிற்கு பெற்று தந்துள்ளார். பாலிவுட்டில் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடித்ததை அடுத்து தெலுங்கிலும் நடித்திருந்தார்.

பின் தமிழில் முழு கவனம் செலுத்தி பல வெற்றிப்படங்களை கொடுத்தார் தனுஷ். தற்போது ஹாலிவுட்டில் இரண்டாம் படத்தில் கமிட்டாகியதை போன்று தெலுங்கில் முதன்முதலில் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். தேனியில் தெலுங்கு பேசும் குடும்பம் என்பதால் தெலுங்கு மொழி சரளமாக பேசுவார் என்பதால் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் கமிட்டாகி அட்வான்ஸ் பெற்றுள்ளார்.

நாகவம்சி என்பவர் தயாரித்தும் வெங்கி அட்லூடி என்பவர் இயக்கும் படத்த்டில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். சமீபத்தில் நடிகரும் பத்திரிக்கையாளரும் பயில்வான் யூடியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளார்.