இனிமே எனக்கு அண்ணன் தான் எல்லாமே!கொலவெறியில் முரண்டு பிடிக்கப்போகும் தனுஷ்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தனுஷ், அசுரன், கர்ணன் படங்களுக்கு பிறகு வெற்றி படத்தினை கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விவாகரத்து செய்து பிரிந்தார்.
விவாகரத்துக்கு பிறகு பெரிய அடியாக விழுந்தது மாறன் படத்தின் படுதோல்வி. இதையடுத்து அண்ணன் செல்வராகவனின் துணையின் அவரது பிரம்மாஸ்த்திரமான நானே வருவேன் படத்தினை கையில் எடுத்திருக்கிறார் நடிகர் தனுஷ்.
கூடிய விரையில் திரையில் வரப்போகும் நானே வருவேன் படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கவும் முடிவெடுத்திருக்கிறார். இந்நிலையில் ராக்கி, சாணிக்காகிதம் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தனுஷை வைத்து ஒரு படத்தினை எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ராக்கி படம் மிகபெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பின் செல்வராகவன், கீர்த்தி சுரேஷை வைத்து சாணிக்காயிதம் படத்தினை இயக்கி அதன் வெளியீட்டிற்காக காத்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ராக்கி, சாணிக்காயிதம் படத்தினை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனுஷ் படத்தையும் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளாராம். வருகிற மே மாதம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாகி படப்பிடிப்பும் ஆரம்பமாகவுள்ளதாம்.
சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையம்சம் கொண்ட படமாக இது இருக்கும் இப்படத்தின் வாய்ப்பு தனுஷின் அண்ணன் செல்வராகவன் தான் சிபாரிசு செய்துள்ளாராம். விவாகரத்துக்கு பிறகு இனிமேல் தனுஷின் புதிய பரிமானம் ஆரம்பமாகவுள்ளது.