150 கோடியில் கட்டிய போயஸ் கார்டன் வீட்டால் தனுஷுக்கு அடித்த யோகம்!! எல்லாம் அந்த ராசி தானாம்..
தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என்று பிஸி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் சமீபத்தில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

இதற்கிடையில் கமிட்டாகி இருக்கும் கேப்டம் மில்லர் படத்தில் நடித்தும் வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதற்கு முன் போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீட்டிற்கு பக்கத்தில் கோடிக்கணக்கில் மதிப்புள்ள நிலம் வாங்கி பூஜை போட்டார்.
மிகப்பெரிய பங்களாவை 150 கோடி செலவில் கட்டப்பட்டும் வந்தது. ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து பெற்றோருடன் இருந்து வந்த தனுஷ், கடந்த வாரம் 150 கோடியில் கட்டப்பட்ட போயஸ் கார்டன் பங்களாவிற்கு குடியேறி கிரஹபிரவேசத்தை முடித்தார்.

அந்த வீட்டினை தன் பெற்றோரை அவமானப்படுத்தியவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அப்பா, அம்மாவிற்கே பரிசாக அளித்தார். இந்நிலையில், வாத்தி படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் தனுஷ் திரை வாழ்க்கையில் கண்டிராத ஒரு பெரிய வசூலை சந்தித்திருக்கிறார்.
அப்படி புது வீட்டிற்கு குடிபுகுந்த நேரத்தில் தமிழ், தெலுங்கு ஒரு மொழிகளிலும் வாத்தி படம் மாபெரும் வெற்றியை பெற்றதோடு பெரிய லாபத்தையும் தனுஷுக்கு கொடுத்திருக்கிறதாம்.