தனுஷை வெறுப்பேற்ற இப்படியா? ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விளாசும் ரசிகர்கள்

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Edward Jul 29, 2022 10:45 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். திருமணமாகி 18 ஆண்டுகளாகி யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் வளர்ந்த பிறகு கருத்து வேறுபாடு காரணமாக ஐஸ்வர்யா - தனுஷ் விவாகரத்து செய்ய பிரிந்து வாழ்வதாக அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர்.

அதன்பின் இருவரும் இரு துருவங்களாக தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தனுஷ் பல படங்களில் நடித்தும் ஐஸ்வர்யா இயக்கம், உடற்பயற்சி, சைக்கிளிங் என்று பிஸியாக இருந்து வருகிறார்கள். நடிகர் தனுஷ் நடிப்பில் ஹாலிவுட் படம் தி கிரே மேன் சமீபத்தில் வெளியாகி தனுஷின் கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படம் வெளியானதை தொடர்ந்து பாலிவுட் இயக்குனர் ரித்தேன் தி கிரேன் மேன் இயக்குனர்கள் ரூஸ்ஸோ பிரதர்ஸ்களுக்கு பார்ட்டி கொடுத்தார். சில பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டதில் நடிகர் தனுஷும் சென்றுள்ளார்.

அவருடன் அட்ராங்கிரே படத்தில் ஜோடியாக நடித்த சாரா அலிகானும் கலந்து கொண்டுள்ளார். அப்போது இருவரும் கைக்கோர்த்தபடி போட்டோஷூட் எடுத்தும் இருந்தனர். இதுகுறித்து பலர் புகைப்படங்களை வைரலாக்கி தனுஷை விமர்சித்தும் வந்தனர்.

இதனை அடுத்து ஐஸ்வர்யாவும் போனி கபூரை பார்த்து புகைப்படத்தை எடுத்து இணையத்தில் பகிர்ந்து கொண்டார். இதனை நெட்டிசன்கள் பழி வாங்க இருவரும் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று கண்டபடி திட்டியும் வருகிறார்கள். தனுஷ் பிறந்த நாளுக்கு கூட ஒரு பதிவினை போட்டு வாழ்த்து கூறவில்லை என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Gallery