இரவு பார்ட்டியில் மது! ஹைதராபாத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா சண்டையா?

divorce dhanush rajinikanth tamilactor aiswaryarajinikanth
By Edward Jan 30, 2022 07:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் கடந்த 18 வருடங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திடீரென இருவரும் சமுகவலைத்தளத்தில் பிரிந்து வாழ முடிவெடுப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டனர். இதற்கு பல காரணங்களும் கூறப்பட்டது. இந்நிலையில் விவாகரத்து அறிவித்த சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் வேலை விஷயமாக சென்றிருந்தனர்.

அங்கு ஜனவரி 16ஆம் தேதி அன்று பிரபலம் ஒருவர் கொடுத்த இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு அங்கு மது அருந்தியுள்ளனர். இருவருக்கும் பிரச்சனை இருப்பதை அறிந்த ஒரு பிரபலம் அவர்களுக்கு அறிவுரை கூறி பேசி வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு சண்டை போட்டுள்ளனர். பின் தனுஷ் - ஐஸ்வர்யா தங்களின் அறைக்கு சென்றுவிட்டனர். மேலும் ஐஸ்வர்யா தனுஷிற்கு கால் செய்து மீண்டும் சண்டையை துவங்கியிருக்கிறார்.

அப்போது இருவரும் பிரிவது என்று முடிவு செய்தார்களாம். காலையில் ஐஸ்வர்யாவிடம் தனுஷ் நேற்று இரவு கூறியது உண்மையா என்று கேட்டுள்ளார்.

ஆம் என்று கூறிய ஐஸ்வர்யா இனிமேல் உங்களுடன் வாழ முடியாது என்று தெரிவித்திருக்கிறார். பின் இருவரும் இந்த முடிவினை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.