மகன் யாத்ராவுக்காக ஜோடியா போஸ் கொடுத்து சேர்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா.. சூப்பர் ஸ்டார் பாத்தா குஷி தான்...
நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 18 ஆண்டுகளில் யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கும் நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக முடிவெடுத்து அறிக்கை வெளியிட்டனர்.
இச்செய்தி சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட அவரது உறவினர்கள் ரசிகர்கள் சினிமாத்துறைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. மகன்களுக்கு கொஞ்சம் பொறுத்து போங்களேன் என்று பலர் அட்வைசையும் கேட்காமல் இருவரும் பார்த்துக்கொள்ளாமல் இருந்து வந்தனர்.
அதன்பின் தங்கள் வேலைகளில் பிஸியாகவும் கிடைக்கும் நேரத்தில் மகன்களுடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் யாத்ராவின் பள்ளியி நடைபெற்ற் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
யாத்ரா ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டதை தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இணைந்து சென்று உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள். இருவரும் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.