கவுதம் மேனனுக்கு எமனாக வந்த தனுஷ்!. மாட்டி முழிக்கும் இயக்குனர் கெளதம் மேனன்..
தமிழ் சினிமாவில் தற்போது இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பெரியளவில் பிரச்சனையாக முடிந்து வருகிறது. அப்படி தான், அமீர் - ஞானவேல் ராஜா பிரச்சனை முதல் கெளதம் வாசுதேவ் மேனன் - ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் நிறுவனம் வரை, இவர்களின் பிரச்சனைகளை இழுத்துக்கொண்டே செல்கிறார்கள்.
அந்தவகையில், தயாரிப்பாளர்கள் கைவிட்ட நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் பலரிடம் கடன் வாங்கி துருவ நட்சத்திரம் படத்தை முடித்துள்ளார். ஆனால் அவர் ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய 2.40 கோடியை தந்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று வழக்கு போட்டனர். இதனால் இன்றுவரை படத்தின் நிலை சந்தேகத்தில் இருக்கிறது.
தனுஷ் - எஸ்கேப் ஆர்ட்டிஸ் மதன்
இந்நிலையில், இந்த விசயத்தில் நடிகர் தனுஷ் பெயர் அடிப்பட்டு வருகிறது. அதாவது, தனுஷ் நடித்த கொடி படத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ் மதன் கெளதமுடன் இணைந்து துருவ நட்சத்திரம் படத்தின் தயாரித்திருக்கிறாராம். இடையில் அவர் வெளியேறிவிட்டார் என்று கூறப்பட்டாலும், இன்னும் அப்படத்தில் மதன் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இதற்கு முன் எஸ்கேப் ஆர்ட்டிஸ் மதன், தனுஷ் நடித்த கொடி படத்தை தயாரித்த போது சம்பள பாக்கி வைத்தாராம். அதேபோல் விண்ணத்தாண்டி வருவாயா படத்தில் கூட சிம்புவுக்கு சம்பள பாக்கி வைத்திருக்கிறாராம்.
துருவ நட்சத்திரம்
நாலா பக்கமும் பிரச்சனை வந்ததால், என்ன செய்வது என்று கெளதம் வாசுதேவ் மேனன், ஒரே ஆளாக இருந்து படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறார். அதற்காக தான், நடிப்பில் கவனம் செலுத்தி அதில் வந்த பணத்தை கொண்டு துருவ நட்சத்திரம் படத்தினை எடுத்து முடித்திருக்கிறாராம்.
ஆனால் தனுஷ் தான் இதில் மறைமுகமாக பிரச்சனை கொடுப்பதாகவும் கோடம்பாக்கத்தில் கூறப்பட்டு வருகிறது.