தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து எல்லாமே பச்சை பொய் தான்.. புது பூகம்பத்தை போட்ட பிரபல நடிகர்..
நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனுஷ் வெற்றியில் முக்கியப்பங்கினை வகித்து வந்தார் ஐஸ்வர்யா. அவரை வைத்து 3 என்ற படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாகவும் நெருக்கமாகவும் நடிக்க வைத்தார்.
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து
அப்படி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்களை பெற்றெடுத்தனர். இரு மகன்களும் தற்போது வளர்ந்த நிலையில் 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து விடுகிறோம் என்று அறிக்கை மூலம் தெரிவித்தனர்.
இந்த செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் வீட்டில் இரு குடும்பத்தினரும் சமூகமாக பேசி விவாகரத்தை ஒத்து வைப்பதாகவும் செய்யவேண்டாம் என்ற முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வைரலானது. இரு மகன்களின் எதிர்காலத்தை கருத்தி இப்படியொரு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
பயில்வான் விளக்கம்
இந்நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் சமீபத்தில் ஒரு குண்டை போட்டுள்ளார். அதில், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சென்றும் சந்தேகப்பட்டால் அதை பெரிய விசயமாக்காமல் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் விட்டுவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இருவரும் கோபத்தில் இப்படியான முடிவை எடுத்துள்ளார்கள். இருவருக்கும் மகன்கள் மீது அதிக பாசமும் அப்பா மீதும் அம்மா மீதும் பாசமாக மகன்களும் இருந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து கேஸ் ஒத்துவைப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
அனைத்துமே பச்சை பொய் தான். தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்திற்காக நீதிமன்றத்திற்கே செல்லவில்லையாம்.
நீதிமன்றம் செய்திருந்தால் அப்போது இந்த விசயம் வெளியில் வந்திருக்கும். இருவரும் ஒரே நேரத்தில் பிரிவதாக அறிவித்தார்களே தவிர விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்காக கோர்ட்டுக்கு செல்லவில்லை.
இருவரும் படித்தவர்கள் குடும்ப பாசமும் குழந்தைகள் மனதை பற்றியும் அவர்கள் உணரக்கூடியவர்கள். இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ ரஜினிகாந்த் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது என பயில்வான் கூறியுள்ளார்.