அசிங்கப்படுத்திய செல்வராகவன், தானு.. கோபத்தில் தனுஷ் பிரமோஷனில் கலந்து கொள்ளாத காரணமே இதுதான்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்திருந்தார்.
பொன்னியின் செல்வன் - நானே வருவேன்
இப்படம் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக நானே வருவேன் படம் தோல்வியை சந்தித்து வருவதாகவும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. நானே வருவேன் படத்தின் தோல்விக்கு பொன்னியின் செல்வன் படமும் ஒரு காரணமாக கூறியிருந்தனர்.
தனுஷ் கோபம்
ஆனால் தனுஷ் இப்படம் 29 ஆம் தேதி வெளியாகவிருப்பது ஆரம்பத்தில் பிடித்திருந்தாலும் போகப்போக அது முற்றிலுமாக பிடிக்கவில்லையாம். அந்த தேதியில் வெளியிட வேண்டாம் என்று தனுஷ் படக்குழுவினரிடம் எவ்வளவோ சொல்லி பார்த்திருக்கிறார்களாம். ஆனால் அதை மீறி படத்தை வெளியிட்டு தனுஷை அசிங்கபடுத்தியிருக்கிறார்கள். இதனால் தான் தனுஷ் நானே வருவேன் படத்திற்காக எந்தவொரு பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளாராம்.