தனுஷை தூக்கி எறிந்த அனிரூத்! வளர்த்துவிட்ட கடா இப்படி துரோகம் செய்யலாமா?

anirudh dhanush sivakarthikeyan
By Jai Jan 21, 2022 06:39 AM GMT
Report

நடிகர் தனுஷின் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார் அனிரூத். Why this kolavari பாடல் உலகம் முழுவதும் பரவி சாதனை படைத்தது. அப்படத்தின் அடுத்து சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் அனிரூத்தை தனுஷ் இசையமைக்க கூறியதில் அதை செய்து கொடுத்தார்.

பின் சிவகார்த்திகேயனே அனிரூத்திற்கு செட்டாகிவிட்டதால் தற்போது வரை அவருக்கு பிடித்த இசையமைப்பாளராகவும் ராசியாகவும் இருந்து வருகிறார் அனிரூத். இதற்கிடையில் விஐபி மற்றும் விஐபி 2 உள்ளிட்ட சில படன்களுக்குமட்டும் இசையமைத்து கொடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன் பக்கம் திரும்பினார் அனிரூத். இதனால் தனுஷிற்கு சிவகார்த்திகேயனுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் மனம் வருந்திய தனுஷ் இதன் பிறகு தன்னுடைய படங்களுக்கு மற்ற இசையமைப்பாளர்கள் போட வேண்டும் எனக்கூறி அனிருத்திற்கு ஒரு சில வருடங்கள் இசையமைக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஆனால் அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தான் என பலரும் கூறுகின்றனர். இது முழுக்க முழுக்க ஈகோவால் ஏற்பட்ட பிரச்சனை என்று சினிமா வட்டாரத்தில் கூறபடுகிறது.