இமான் சர்ச்சையை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மோதப்போகும் நடிகர் தனுஷ்..
தமிழ் சினிமாவில் தற்போது பெரிதாக பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது டி இமான் - சிவகார்த்திகேயன் பிரச்சனை தான். தனக்கு துரோகம் செய்து விட்டார் சிவகார்த்திகேயன், அவருடன் இனி சேரப்போவதில்லை என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.
இதற்கு காரணம் இமானின் முன்னாள் மனைவி மோனிகாவுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவருடன் ஆபாசமாக சிவகார்த்திகேயன் பேசினார் என்ற தகவலும் பலர் பேசி வந்தனர்.
இதற்கு சிவகார்த்திகேயன் தரப்பில் கூட எந்த பதிலும் கிடைக்காததால் அது பற்றி இன்னும் பேசி வருகிறார்கள். இதனால் சிவகார்த்திகேயன் படத்திற்கும் மார்க்கெட்டிற்கும் பிரச்சனை வரும் என்று பத்திரிக்கையாளர்கள் பேசி வருகிறார்கள்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் பல ஆண்டுகள் கழித்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்ததால் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியில் இருந்தார்.
அதற்கு பிரச்சனையாக தற்போது தனுஷும் இறங்கி இருக்கிறார். டிசம்பர் மாதம் வெளியாகவிருந்த தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஏற்கனவே தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சண்டை, இன்று வரை இருவரும் பேசிக்கொள்வதில்லை என்றும் கூறப்பட்டு வந்தது. தற்போது தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு போட்டு போடும் அளவிற்கு இறங்கிவிட்டாரே என்று இணையத்தில் கலாய்த்து பேசி வருகிறார்கள்.
You May Like This Video