தனுஷ் உண்மையாவே அரசியலுக்கு வருகிறாரா!! பிரபலம் கொடுத்த விளக்கம்....

Dhanush Gossip Today Tamil Actors
By Jai Jul 09, 2026 05:15 AM GMT
Report

தனுஷ்

அரசியல் கட்சியை ஆரம்பித்த சில வருடங்களில் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில் தற்போது மேலும் சில நடிகர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

சமீபத்தில் ராகவா லாரன்ஸ், நான் அரசியலுக்கு வரவேண்டுமா என்பது மக்கள் தான் கூற வேண்டும் என்றும் தனக்கு மரியாதை கொடுக்கும் கட்சியில் இணைவேன் என்றும் கூறியிருந்தார். அதேபோல் சூர்யா, சிம்பு போன்ற நடிகர்களின் ரசிகர்களும் அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

தனுஷ் உண்மையாவே அரசியலுக்கு வருகிறாரா!! பிரபலம் கொடுத்த விளக்கம்.... | Dhanush Coming To Politics Fans Club Chief Reacts

ஓம் படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷின் ரசிகர் மன்ற கொடியின் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் பரவி வருகிறது. எண்ணம் போல் தான் வாழ்க்கை என்ற வசனம் கொடியில் இருக்க, புதிய கொடியை அறிமுகப்படுத்தினார் தனுஷ். இது அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டம் என்றும் பேசப்பட்டு வருகிறது.

சுப்பிரமணிய சிவா

இந்நிலையில் அர்ஜுனன் பேர் பத்து படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சுப்பிரமணிய சிவா தனுஷின் கொடி குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்த கொடி புதிது அல்ல, கடந்த 15 ஆண்டுகளாக தனுஷ் ரசிகர் மன்றத்தினர் திருமணம், காதுகுத்து விழா, திரைப்பட ரிலீஸ் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த ஆண்டுக்கான ரசிகர் மன்ற கூட்டத்தில் சில ரசிகர்கள் அந்த கொடியை காரில் பொருத்தும் வகையில் புதிய வடிவில் வடிவமைத்து பொறுத்தியுள்ளனர். இதை பார்த்து தனுஷுக்கான புதிய கொடி, அவர் விரைவில் அரசியலுக்கு வருகிறார் என்றெல்லாம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சுப்பிரமணிய சிவா.

Gallery