கருமுட்டையை அதற்காக உறைய வைத்தேன்!! நடிகை க்ரித்தி சனோன் ஓபன் டாக்...

Bollywood Kriti Sanon Actress
By Jai Jul 09, 2026 03:59 AM GMT
Report

க்ரித்தி சனோன்

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை க்ரித்தி சனோன். தேரே இஷ்க் மே தொடர்ந்து, Cocktail 2 என்ற படத்தில் நடித்திருந்தார் க்ரித்தி சனோன்.

கருமுட்டையை அதற்காக உறைய வைத்தேன்!! நடிகை க்ரித்தி சனோன் ஓபன் டாக்... | Kriti Sanon Revealed She Underwent Egg Freezing

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் திருமண அழுத்தத்தை தவிர்க்க கருமுட்டையை உறைய வைத்தேன் என்று கூறியுள்ளார்.

கருமுட்டை

அதில், நான் குழந்தைகளை விரும்புகிறேன், ஆனால் திருமணம் அல்லது குழந்தைப்பேறுக்காக அவசரப்பட விரும்பவில்லை. எதிர்காலத்தில் நான் தயாராக இருக்கும் நேரத்தில் தாயாகும் வாய்ப்பை பாதுகாக்கும் நோக்கில் கருமுட்டையை உறையவைத்தேன்.

இந்த முடிவுக்குப்பின் வயது, சமூக அழுத்தம் குறித்த கவலை நீங்கி மனநிம்மதி கிடைத்துள்ளது. இது பயத்தால் அல்ல, என்னுடைய வாழ்க்கைக்கு ஏற்ற நேரத்தில் குடும்பம் அமைக்க எடுத்த தனிப்பட்ட முடிவு.

தற்போது என்னுடைய கவனம் வாழ்க்கை, சினிமா பயணத்தை ரசிப்பதில்தான் இருக்கிறது. சரியான நேரம் வரும்போது திருமணம், குழந்தைப்பேறு குறித்து முடிவெடுப்பேன் என்று க்ரித்தி சனோன் வெளிப்படையாக பேசியுள்ளார்.