நயன்தாரா பத்தி அப்பவே சொன்னேன், தனுஷ் கேக்கல!! உண்மையை கூறிய செல்வராகவன்..
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து அண்ணன் இயக்கத்தில் பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார் தனுஷ்.
செல்வராகவனும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக அவதாரம் எடுத்து வந்தார். தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியும் வருகிறார்.
செல்வராகவன் பேட்டி
இந்நிலையில் செல்வராகவன் அளித்த பழைய பேட்டியொன்று இணையத்தில் பரவியுள்ளது. அந்த பேட்டியில் ஐயா படத்தை பார்த்தபோதே நடிகை நயன் தாரா மிகப்பெரிய ஹீரோயினாக வருவார் என்று கூறினேன். ஆனால் என் தம்பி தனுஷ் கூட நான் சொன்னதை நம்பவே இல்லை.
தற்போது நயன் தாரா மிகப்பெரிய ஸ்டாராக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அதேபோல் எதிர்நீச்சல் படத்தை பார்த்தபோது சிவகார்த்திகேயன் மிகப்பெரிய ஹீரோவாக வருவார் என்று தனுஷிடம் கூறினேன்.
அதன்பின் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து வருகிறார் என்று செல்வராகவன் கூறியிருக்கிறார். அப்போதே நயன் தாரா, சிவகார்த்திகேயன் எதிர்காலத்தை கணித்திருப்பதை பலரும் வியந்து பார்த்து வருகிறார்கள்.