அந்த விசயத்துக்காக நினைத்து நினைத்து ஃபீல் பண்ணும் தனுஷ்!! எல்லாம் அதுதான் காரணம்..
தமிழ் சினிமாவை தாண்டி, டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று டாப் இடத்தினை பிடித்ததோடு சிறந்த நடிகர் என்ற பெருமையையும் பெற்று வருகிறார் நடிகர் தனுஷ்.
சினிமாவில் நடிப்பை தாண்டி, இயக்கம், தயாரிப்பு, பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத்திறமையை கொண்டு டாப் இடத்தில் இருக்கிறார்.
சமீபத்தில் 18 ஆண்டுகளாக வாழ்ந்து மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து தற்போது அடுத்ததடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் இருந்து தனுஷ் சில விசயங்களை தான் மிஸ் செய்துள்ளேன் என்று கூறி வந்தார். அப்படி படிப்பை நிறுத்திவிட்டு நடிக்க ஆரம்பித்ததால் கல்லூரியில் படிக்கமுடியாமல் போனதை நினைத்து ஃபீல் பண்ணியிருக்கிறார்.
மேலும், சரளமாக ஆங்கிலம் பேச முடியவில்லை என்று கூட வருத்தப்பட்டிருக்கிறாராம்.
இரு சகோதரரிகளை போல் தானும் டாக்டராக வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறாமல் போயுள்ளது. அதைவிட வளர்ந்த பின் குக் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட தனுஷுக்கு அந்த ஆசையும் நிறைவேறாமல் அதை நினைத்து நினைத்து ஃபீல் செய்து வருகிறாராம்.