பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகர் அபிநய்.. நடிகர் தனுஷ் என்ன செய்துள்ளார் தெரியுமா?
Dhanush
Tamil Cinema
Tamil Actors
By Bhavya
அபிநய்
தனுஷின் முதல் படம் துள்ளுவதோ இளமை. அந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் அபிநய். அந்த படத்திற்கு பிறகு அவர் ஜங்க்ஷன், தாஸ் போன்ற பல படங்களில் நடித்தார்.
ஆனால், அவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் சரியான வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று தரவில்லை. பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் கடும் வறுமையில் இருப்பதாக சில வருடங்களுக்கு முன்பு அவர் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகர் அபிநய்யின் மருத்துவச் செலவுக்கு சமீபத்தில் KPY பாலா நேரில் சந்தித்து அவருக்கு பண உதவி செய்திருந்தார்.
என்ன செய்துள்ளார் தெரியுமா?
அதை வைத்து பலர் நடிகர் தனுஷ் ஏன் உதவி எதுவும் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், தற்போது நடிகர் தனுஷ் அபிநய்க்கு ரூ. 5 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.