விவாகரத்துக்கு பின் வாரிசு நடிகையுடன் இரவு பார்ட்டி.. வைரலாகும் தனுஷ் புகைப்படம்..

Dhanush Sarathkumar Radhika Sarathkumar Varalaxmi Sarathkumar
By Edward Aug 22, 2022 08:10 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் தன் அண்ணனின் அறிமுகத்தால் பிரபலமானார்.

அதன்பின் காதல் கொண்டேன், தேவதையை கண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம், 3, மாரி, விஐபி, அசுரன், வட சென்னை. கர்ணன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். கோலிவுட் தாண்டி ராஞ்சனா என்ற பாலிவுட் படத்தில் நடித்து இந்தியில் அறிமுகமாகினார்.

அதன்பின் சமீதாப், அட்ராங்கி ரே போன்ற படங்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் நடித்து தமிழ் பெருமையை சேர்த்தார். தனுஷ் ஆரம்பகால கட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்துக்கு பின் வாரிசு நடிகையுடன் இரவு பார்ட்டி.. வைரலாகும் தனுஷ் புகைப்படம்.. | Dhanush In Radhika Sarathkumar Birthday Paty

திருமணத்திற்கு பிறகு 18 ஆண்டுகளாக ஒன்றாக இருந்து யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்களை பெற்றெடுத்தார். சரியாக சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிவதாக முடிவெடுத்து அறிக்கை வெளியிட்டனர். அனைவரும் அதிர்ச்சியில் இருந்து வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் சுமுகமாக பேசியும் பார்த்திருக்கிறார்.

தற்போது தங்கள் பணிகளில் கவனம் செலுத்தி வரும் தனுஷ் - ஐஸ்வர்யா மகன் யாத்ராவிற்காக ஒன்றாக இணைந்து அவரது பள்ளிக்கு சென்று மகனை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள்.

விவாகரத்துக்கு பின் வாரிசு நடிகையுடன் இரவு பார்ட்டி.. வைரலாகும் தனுஷ் புகைப்படம்.. | Dhanush In Radhika Sarathkumar Birthday Paty

இந்நிலையில் நேற்று நடைபெற்ற நடிகை ராதிகாவின் 61 வது பிறந்த நாள் பார்ட்டியில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அதில் நடிகர் தனுஷும் கலந்து கொண்டு ராதிகாவை வாழ்த்திருக்கிறார். சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமாருடன் தனுஷ் எடுத்துக்கொண்ட பார்ட்டி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery