இரவு 12 மணிக்கு திருமணமான நடிகைக்கு போன் போட்டு பேசிய தனுஷ்!! விவாகரத்துக்கு காரணமே இதானாம்..
சினிமா பிரபலங்களை பற்றிய அந்தரங்க மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவதற்கென்றே சிலர் சமீபகாலமாக பேட்டிக்கொடுத்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் இதனால் கடும் எதிர்ப்பை சந்தித்தும் அதை பொருட்படுத்தாமல் அதை செய்து வருகிறார்.
தனுஷ் - அமலா பால்
ஏற்கனவே நடிகர் தனுஷ், நடிகை அமலா பாலுடன் நடித்திருந்த போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தால், 2 மாதங்கள் தனுஷ் வீட்டிற்கே போகாமல் இருந்துள்ளார். இதை கேள்விப்பட்டு ஐஸ்வர்யா தந்தை ரஜினிகாந்த் நேரடியாக அமலா பால் அப்பார்ட்மெண்ட்டிற்கு சென்று எச்சரித்ததாகவும் இருவரை பற்றியும் எந்த தகவலும் என் காதுக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டதாக செய்யாறு பாலு தெரிவித்திருந்தார்.
பயில்வான் ரங்கநாதன்
அவரை தொடர்ந்து தற்போது பயில்வான் ரங்கநாதன் மறைமுகமாக கூறியதை தற்போது வெளிப்படையாக கூறி ஷாக் கொடுத்துள்ளார். அதாவது, தனுஷ் எல்லா படத்திற்கு நடிகைகளை மாற்றிக்கொண்டே இருப்பார். வேலையை நன்றாக வாங்கி கொள்வார் என்றும் இவர் தான் ஒரு நடிகையின் விவாகரத்துக்கு காரணம் என்றும் கூறியுள்ளார் பயில்வான். அவர் வேறு யாரும் இல்லை நடிகை அமலா பால் தான்.
தொந்தரவு
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய அமலா பால், மீண்டும் சமரசம் செய்து அவரை நடிக்க வைத்தது மட்டுமில்லாமல் கணவர் பக்கத்தில் இருக்கும் போதே இரவு 12 மணிக்கு கூட கால் செய்து அவரை தொந்தரவு செய்வாராம் தனுஷ். இப்படி ஆரம்பித்த பிரச்சனை தான் கடைசியில் பெரிய பிரச்சனையாக முடிந்து, வாழ முடியாது என்று கூறி விவாகரத்து செய்து விட்டார் அமலா பால். இப்படி பயில்வான் ரங்கநாதன் கூறியது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.