கர்ப்பத்தை கணவரோடு அறிவித்த விஜே பிரியங்கா!! கொண்டாடும் ரசிகர்கள்..
Priyanka Deshpande
By Jai
விஜே பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே.

பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, கடந்த ஆண்டு வசி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு வருடமான நிலையில் தற்போது கர்ப்பத்தை அறிவித்துள்ளார் விஜே பிரியங்கா.
தான் கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் அம்மா, அப்பா ஆகப்போவதாகவும் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு பலரது கவனத்தையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.