விவாகரத்துக்கு பின் தனுஷுடன் ஓட்டலில் இருந்தது யார்? கசிந்த ரகசிய தகவல்..
தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என தன் திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வரும் நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்தும் இயக்கியும் வருகிறார். இதற்கிடையில் தன் இரு மகன்களுடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார். நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகந்தை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமண வாழ்க்கையில் யாத்ரா ராஜா, லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் இருக்கும் நிலையில் 18 வருட வாழ்க்கையில் இருந்து பிரியவுள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதற்கு காரணம் தனுஷ் சில நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் இந்த விசயம் ஐஸ்வர்யா காதுக்கு சென்றதால் தான் பிரிந்தார்கள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தனுஷ் கடந்த ஆண்டு ஹைதராபாத் ஓட்டல் ஒன்றில் பெண் ஒருவருடன் உணவு அருந்தும் படியான புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரலானது. தனுஷின் பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி பெண் காவ்யா ஸ்ரீராம் தானாம். அந்த சமயத்தில் இரு படங்கள் ஷூட்டிங் சென்று கொண்டிருந்ததால் தான் ஆடை வடிவமைப்பாளர் காவ்யா ஸ்ரீராம் ஒன்றாக இருந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
சமீபத்தில் கூட மேடையொன்றில் தன்னை இப்படி ஸ்டைலாக காட்டும் காவியா ஸ்ரீராமுக்கு நன்று என்று தனுஷ் கூறியிருக்கிறார். இதுபோல் நடிகைகளுடன் சாதாரணமாக ஷூட்டிங்கில் தனுஷ் பேசுவது நிற்பது போன்ற புகைப்படங்கள் லீக்காகி பல வதந்திகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video