தனுஷ் அந்த படத்தில் என்னை காதலித்தார்? இந்த நடிகைதான் மனைவி பிரிய காரணமோ!!

dhanush aishwaryarajesh vadachennai
By Edward Apr 07, 2022 10:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. அப்படி நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா போன்ற பல படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வடசென்னை படத்தில் சிறப்பாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

அப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் தன்னை நல்லபடியாக நடிக்க வைத்துள்ளார் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும், கெட்டவார்த்தை பேசிதான் இந்த வாய்ப்பே எனக்கு கிடைத்தது என்றும் கூறியிருந்தார்.

வடசென்னையில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை பார்த்து நடிகர் தனுஷே என்னை காதலித்து விட்டதாகவும் அந்த அளவிற்கு எங்களின் காதல் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இயக்குனர் வெற்றிமாறன் நடிக்க வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.