லியோவை 10 நாளில் பந்தாடிய ஜெய்லர் 2

Box office Jailer 2
By Tony Oct 24, 2026 09:30 AM GMT
Report

லியோ தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம். இப்படம் வெளிவந்து உலகம் முழுவதும் ரூ. 600 கோடிகள் வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது.

இந்நிலையில் லியோ படத்தின் வசூலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படம் வெளிவந்த 10 நாட்களில் அந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்துள்ளது.

லியோவை 10 நாளில் பந்தாடிய ஜெய்லர் 2 | Jailer 2 Surpassed Leo Movie Box Office

தற்போது வரை இப்படம் ரூ 620 கோடிகள் வரை வசூல் செய்ய கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் இப்படம் ரூ 700 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் 2.0 படம் தான் உலகம் முழுவதும் ரூ 700 கோடி வரை வசூல் செய்திருக்கும் நிலையில், இந்த சாதனையை ஜெயிலர் 2 கண்டிப்பாக முறியடிக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.