தில் இருந்தா நேருக்கு நேர் மோதுங்க.. தனுஷ் மேனேஜர் யாரை கூறுகிறார்?
தனுஷ்
நடிகராக மட்டுமின்றி சமீபகாலமாக இயக்குநராகவும் சிறந்து விளங்கி வருகிறார் தனுஷ்.
இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ராயன் படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த ஆண்டு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளிவந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.
தற்போது, நான்காவதாக தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இட்லி கடை. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
யாரை கூறுகிறார்?
இந்த படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இட்லி கடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " ஃபேமஸ் ஆக இரண்டு வழி இருக்கு. ஒன்னு ரத்தம், வேர்வை சிந்தி உழைச்சு டாப்புக்கு வர்றது. இரண்டாவது டாப்பில் உள்ளவர்களை அடிச்சு மேல வர்றது.
தனுஷ் சார் வாழ்க்கை கொடுத்தவங்க. நேருக்கு நேர் மோதுனா ஓகே. ஆனா ஒரு கம்ப்யூட்டர் பின்னாடி ஒளிஞ்சிகிட்டு பேசுறது ஏத்துக்க முடியல.
நீங்க பாலிவுட், கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என எல்லா வுட்லையும் படம் பண்ணிட்டீங்க. நீங்க நடிச்சா மட்டும் பத்தாது. பி ஆர் பண்ணவும் கத்துக்கோங்க. தலைவர் சொன்ன மாதிரி, நல்லவனா இருங்க, ரொம்ப நல்லவனா இருக்காதீங்க" என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ரசிகர்கள் இவர் நயன்தாராவை கூறுகிறாரா அல்லது சிவகார்த்திகேயனை கூறுகிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.