மாமனார் ரஜினிகாந்த் வீட்டிற்கு விசிட் அடித்த தனுஷ்!! விவாகரத்துக்காக அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா..

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth Divorce
By Edward Apr 16, 2024 06:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 18 ஆண்டுகளுக்கு பின் பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்தார். அதற்காக கடந்த 2022 ஜனவரி 17 ஆம் தேதி இருவரும் அறிக்கை மூலம் தனித்து வாழ்வதாக தெரிவித்தனர். அதை அறிவித்த 2 ஆண்டுகளுக்கு பின் தனுஷ் - ஐஸ்வர்யா சட்டப்படி விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

மாமனார் ரஜினிகாந்த் வீட்டிற்கு விசிட் அடித்த தனுஷ்!! விவாகரத்துக்காக அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா.. | Dhanush Meets Rajinikanth In Poes Garden Residence

இந்த மனுவை ஏற்ற குடும்ப நல நீதிமன்ற அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தனுஷ் - ஐஸ்வர்யா இருவரையும் விவாகரத்து கோரிய வழக்கில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து விசயம் பேசுபொருளாக மாற, பல பத்திரிக்கையாளர்கள் இதுபற்றி விவாதம் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில், ஐஸ்வர்யா இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்றும் தனுஷ் இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்றும் பத்திரிக்கையாளர் சந்தோஷ் ஜோசப் பகிர்ந்துள்ளார். தனுஷ் வீட்டில் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்தது போல் ரஜினிகாந்தும் அதற்கு முயற்சி செய்திருக்கிறாராம். இந்நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி, ரஜினியின் போயஸ் கார்டன் பங்களாவிற்கு தனுஷ் சென்றதாக செய்திகள் கசிந்துள்ளது.

மாமனார் ரஜினிகாந்த் வீட்டிற்கு விசிட் அடித்த தனுஷ்!! விவாகரத்துக்காக அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா.. | Dhanush Meets Rajinikanth In Poes Garden Residence

அங்கிருந்து அவர் தன் காரில் சென்ற போது எடுத்த வீடியோ கூட இணையத்தில் வெளியானது. இரு மகன்களுக்காக சேர்ந்து வாழுமாறு தனுஷை ரஜினி வலியுறுத்தினாராம். ஆனால் எனக்கு விவாகரத்து கண்டிப்பாக வேண்டும் என்று கறாராக கூறியிருக்கிறாராம் ஐஸ்வர்யா. அதன்பின் இரு பிள்ளைகளுக்காக மனமிறங்கி வரக்கூடாதா என்று ரசிகர்கள் ஐஸ்வர்யாவிடம் கேட்டு வருகிறார்கள்.

மாமனார் ரஜினிகாந்த் வீட்டிற்கு விசிட் அடித்த தனுஷ்!! விவாகரத்துக்காக அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா.. | Dhanush Meets Rajinikanth In Poes Garden Residence