காதல்-ஆ? வேண்டவே வேண்டாம் என்று தூக்கி எறிந்த தனுஷ்! அதுவும் அந்த நடிகையுடனாம்..
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் காதல். பரத், சந்தியா நடிப்பில் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தினை பிடித்த படமாக இருந்தது. இப்படத்தில் பரத் கதாபாத்திரத்திற்கு பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டன் தான் முதலில் நடிக்கவிருந்ததாம்.
சில காரணங்களால் அதுவும் படத்தின் டெஸ்ட் காட்சிகள் எடுக்க்கும் போது சந்தியாவுடனான கெமிஸ்ட்ரி மணிகண்டனுக்கு செட்டாகவில்லையாம். இதனால் அவரை நீக்கிவிட்டு பாய்ஸ் படத்தில் நடித்த மற்றுமொரு நடிகரான பரத்தை, ஹீரோவாக போட்டுள்ளனர்.
ஆனால் பரத், பார்ப்பதற்கு ரொம்பவும் கலராக இருந்ததால் அவரையும், டெஸ்ட் ஷாட்டில் மெக்கானிக் அழுக்கு பையன் போல் மாற்றியுள்ளனர்.இவர்களுக்கு முன்னதாகவே இந்த படத்தில் நடிக்க தனுஷிடம் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
அந்த சமயத்தில் தனுஷ் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு சென்று இருந்தாராம். அதனால் மலேசியாவிற்கு சென்று அந்த கதையை சொல்லியிருக்கிறார். படத்தின் கதை தனுஷிற்கு ரொம்ப பிடித்துப் போனதாம்.
ஆனால் அதில் முருகன் என்னும் கதாபாத்திரம், கிளைமாக்ஸ் காட்சியில் பைத்தியமாக சுற்றுவது அவருக்கு கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தியதாம். அதனாலே படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.