தனுஷின் இட்லி கடை செட்டில் பயங்கர தீ விபத்து.. நடிகர்களின் நிலை? அதிர்ச்சி சம்பவம்

Dhanush Tamil Cinema Tamil Actors
By Bhavya Apr 20, 2025 07:30 AM GMT
Report

 தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ், தற்போது இயக்குநராகவும் மும்முரமாக வேலைபார்த்து வருகிறார்.

கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த ராயன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளிவந்தது.

அடுத்து, தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் நடித்து வருகிறார்கள்.

தனுஷின் இட்லி கடை செட்டில் பயங்கர தீ விபத்து.. நடிகர்களின் நிலை? அதிர்ச்சி சம்பவம் | Dhanush Movie Set Got Fired

நடிகர்களின் நிலை?

தற்போது அனுப்பப்பட்டி கிராமத்தில் செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைக்கப்பட்டிருந்த செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இட்லி கடை படத்திற்காக மரம் மற்றும் பிளைவுட்டால் அமைக்கப்பட்ட அந்த செட்டில் பற்றிய தீ மளமளவென பரவியது.

இதனால் ஆண்டிப்பட்டி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். நல் வாய்ப்பாக அப்போது ஷூட்டிங் நடைபெறாததால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.     

தனுஷின் இட்லி கடை செட்டில் பயங்கர தீ விபத்து.. நடிகர்களின் நிலை? அதிர்ச்சி சம்பவம் | Dhanush Movie Set Got Fired