விவாகரத்துக்கு பின் தனுஷின் விலைமதிப்பில்லா சொத்து என்ன தெரியுமா? இதுதான்..

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Edward Jul 19, 2022 04:00 PM GMT
Report

உச்ச நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகர் தனுஷ் தற்போது டோலிவுட், பாலிவுட், ஹலிவுட் என பிஸியாக நடித்து வருகிறார். இதுவரையில் விவாகரத்துக்கு பின் அவர் சம்பாதித்த சொத்து மதிப்பு 180 கோடி என்றாலும் விலைமதிக்காத பல சொத்துக்கள் அவர் சம்பாதித்து வைத்துள்ளார்.

இளம் வயதில் இருந்தே தரமான நட்சத்திர நடிகர் என்ற பெயரை மூத்த நடிகர்கள் புகழுக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வருகிறார். தன்னுடைய திறமையால் மக்களை ஈர்த்தும் வருகிறார். வாரிசு நடிகராக அறிமுகமாகினாலும் தன் குடும்பத்தின் பின்புலம் இல்லாமல் தன் திறமையால் உயரத்தை தொட்டவர்.

எந்த மாதிரியான கதாபாத்திரம் என்றாலும் அப்பயே கச்சிதமாக நடிக்கும் குணம் கொண்டவர். இளம் வயதில் இருந்தே நடிப்பால் பல விருதுகளை பெற்ற தனுஷ், தேசிய விருது உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரர்.

விகடன் விருது 5, எடிசன் விருது 5, IIFA விருது 2, South Indian International Movie Awards - 13 விருதுகள், 10 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய Filmfare விருதுகள், 4 தேசிய விருதுகள், Filmfare ஒன்று விருதுகளும் வாங்கியுள்ளார் நடிகர் தனுஷ்.

நடிப்பை தவிர, தயாரிப்பு, பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என்று பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்து வருகிறார். திறமையால் தற்போது ஹாலிவுட் நடிகராக திகழ்ந்து அமெரிக்க நடிகர் நடிகைகளே தனுஷை புகழும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.

இளம் வயதில் திருமணம் செய்து 18 ஆண்டுகளுக்கு பின் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து பிரிந்தாலும் நல்ல அப்பாவாக யாத்ரா, லிங்காவுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட மகன்கள் இருவரையும் ஹாலிவுட் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.