ரஜினி - தனுஷை சேர்த்து வைக்க போராடிய உதயநிதி!! மகள் ஐஸ்வர்யா போட்ட புது பிளான்..
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டார்லின் மற்றும் வடிவேலு இணைந்து நடித்த மாமன்னன் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் நிலையில் வடிவேலு பாடிய ஒரு பாடல் வெளியாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. படத்தின் பிரமோஷனுக்காக இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி மற்றும் கமல் ஹாசனை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்களாம்.
ஆனால் ரஜினிகாந்த் வரவில்லையாம். அதற்கு காரணம் நடிகர் தனுஷும் நிகழ்ச்சிக்கு வருவதாக கூறப்பட்டதால் தானாம்.
ஆனால் தனுஷ் வருவதால் ரஜினிகாந்த் வரவில்லை என்ற காரணம் ஒரு பக்கம் இருக்கும் போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தின் முக்கிய காட்சி எடுக்கவுள்ளதால் தான் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை என்று பத்திரிக்கையாளர்கள் பிஸ்மி மற்றும் அந்தணன் தெரிவித்துள்ளனர்.
ஆக மொத்தத்தில் மகளை ஒதுக்கிய தனுஷ் மூஞ்சில் முழிக்க கூடாது என்று ரஜினிகாந்த் ஒரு குறிக்கோளில் இருக்கிறார் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
#UdhayanidhiStalin’s #MAAMANNAN audio launch ? will be attended by #KamalHaasan & #Dhanush...?
— gowri_gal (@gowri_gal) May 19, 2023
?: @valaipechu pic.twitter.com/I00iKl81LX