நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு தனுஷ் இப்படியொரு வேலை பார்த்திருக்காரா? உண்மையை உடைத்த இயக்குனர்..

Dhanush Vijay Sethupathi Nayanthara Vignesh Shivan
By Edward May 07, 2022 10:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. ஐய்யா படத்தில் ஆரம்பித்த கதாநாயகி அவதாராம், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி டாப் ஆர்டரில் காலெடி எடுத்து வைத்தார்.

முன்னணி நடிகை:-

அதன்பின் முன்னணி நடிகர் ரஜினி, விஜய் அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை மற்றும் தென்னிந்திய சூப்பர் ஸ்டாராகினார்.

காதல் வாழ்க்கையில் திருமணம்:-

இடையில் காதல் கிசுகிசுவிலும் சிக்கிய நயன் தாரா நானும் ரெளடி தான் படத்தின் போது விக்னேஷ் சிவன் மீது காதல் ஏற்பட்டு தற்போது வரை லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார்கள். நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு வரும் ஜூன் 9 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

நானும் ரெளடி தான் ஆரம்பித்த கதை:-

இந்நிலையில் விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து சில பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். அப்படி இயக்குனர் சித்ரா லட்சுமனனின் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் முதன் முதலாக நானும் ரெளடி தான் படத்தின் போது நயன் தாராவிடம் கதையை எப்படி கூறினீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், போடா போடி படம் சமயத்தில் அப்படத்தினை பார்த்த விஜய் சேதுபதிக்கு பிடித்தது. அதனால் நான் விஜய் சேதுபதியிடம் சென்று கதை கூறினேன்.

கதை கூறும் போது தூங்கிவிட்டு என்னடா கதை என்று கூறி ஒரு வருடம் ஒதுக்கிவிட்டார். சரி ஓகே என்று கூறி கெளதம் கார்த்திக்கிடம் பேசி ஹீரோவை புக் செய்தேன்.

தனுஷ் சிபாரிசில் நயன் தாரா:-

நானும் ரெளடி தான் படத்தின் தயாரிப்பாளராக இருந்தவர் நடிகர் தனுஷ். கதையை பற்றி முன்பே அறிந்திருந்தார். பின் தனுஷ் சார் என்னிடம் நயன் தாராவிற்கு ஒரு கதை சொல்லு என்று கேட்டார். அதன்பின் நயன் தாராவிடம் கதை கூற நானும் கோ-பிரொடியூசரும் சென்றோம். அப்போது அவர்களை பார்த்து கதை கூறும் போதே, சிரித்துக் கொண்டே கதை சூப்பர் என்று கூறினார்.

ஆனால் கெளதம் கார்த்தி தான் பரவாயில்லையா மேடம் என்று கூறினேன். பரவாயில்லை கதை நன்றாக இருக்கிறது என்று எதிர்ப்பார்க்காத விதத்தில் பதிலளித்தார். அதன்பின் கெளதம் கார்த்தி விலகி விஜய் சேதுபதியிடம் மீண்டும் கதையை கூறினேன். என்னை விட நயன் தாரா தான் நானும் ரெளடி தான் கதை மேல் நம்பிக்கையாக இருந்தார்.

அதன்பின் படம் ஆரம்பமாகி சூப்பர் ஹிட் கொடுத்தது. படம் ஹிட் கொடுத்ததோ இல்லையோ விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் நயன்தாரா சூப்பர் ஹிட் கொடுத்து வருகிறார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். மேலும் தனுஷ் இப்படியெல்லாம் வேலை பார்த்திருக்காரா என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள்.