விஜய் படத்தில் நடிக்க மறுத்த தனுஷ்.. உண்மையை கூறிய இயக்குநர்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜனநாயகன் படம் வெளிவரவுள்ளது. விஜய்யின் நடிப்பில் இயக்குநர் வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த படம் பகவதி.
இப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிகர் ஜெய் நடித்திருப்பார். ஆனால், முதலில் நடிகர் தனுஷை தான் விஜய்யின் தம்பியாக நடிக்க வைக்க திட்டமிட்டதாக இயக்குநர் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

ஆனால் தனுஷ் நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம். துள்ளுவதோ இளமை ரிலீஸ் ஆகி இருந்த நேரத்தில் தான் பகவதி பட வாய்ப்பு தனுஷை தேடி சென்றிருக்கிறது. தனுஷ் “தம்பி ரோல் தனக்கு செட் ஆகாது” என வெளிப்படையாகவே கூறிவிட்டாராம்.
விஜய் - விஜயகாந்த் உடன் நடித்தபோது B, C சென்டர்களில் இறங்கியது போல இந்த படம் உங்களுக்கு அமையும் என இயக்குனர் சொல்ல. அதெல்லாம் தேவையில்லை, காதல் கொண்டேன் படம் வந்தாலே அது எனக்கு நடக்கும் என கூறினாராம் தனுஷ்.