தயாரிப்பு நிறுவனத்தை அசிங்கப்படுத்திய தனுஷ்.. கோடியில் புரளவிட்டா இப்படியா நடந்துப்பீங்க..
தமிழ் நடிகராக இருந்து பாலிவுட், ஹாலிவுட் என்று கொடிக்கட்டி பறந்து வருகிறார் நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் ஆரம்பித்து தற்போது திருச்சிற்றம்பலம் படம் வரை அவர் நடிப்பில் அசத்தி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
வடசென்னை, கர்ணன், அசுரன் போன்ற மிரட்டும் படியான கதைகளில் நடித்து வந்த தனுஷ், ராஞ்சனா, ஷமிதாப், அட்ராங்கி ரே போன்ற பாலிவுட் படங்கள் மூலம் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.
தி கிரே மேன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. தற்போது வரை இப்படம் 50 கோடி அளவில் வசூலித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனுஷை வைத்து பேட்டி எடுக்க ஒரு நிகழ்ச்சியை முடிவெடுத்திருந்தார்களாம். ஆனால் தனுஷ் அந்த பேட்டியெல்லாம் கொடுக்க முடியாது என்று அசிங்கப்படுத்தி ஏமாற்றி இருக்கிறாராம்.
இதற்கு என்ன காரணம் என்று பிரபல சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர். தனுஷ் இப்படம் வெளியாகவிருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதற்கான பிரமோஷன் வேலைகளில் சரியாக கவனம் செலுத்தவில்லையாம்.
தனுஷ் தான், தன் செலவில் பப்ளிசிட்டி செய்து படத்தினை பிரமோட் செய்தாராம். அதனால் தான் தனுஷ் பேட்டி கொடுக்க முடியாது என்று ஒதுக்கி இருக்கிறாராம்.