நயன்தாராவை 13 வருடமாக ஒதுக்கிய தனுஷ்! ஆனா இதுமட்டும் ஓகேவாம்..

dhanush nayanthara yaaradineemohini nanumrowdydhaan
By Edward Dec 04, 2021 07:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் பல எதிர்ப்புகளுக்கு பிறகு தேசிய விருது வாங்கும் அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளார். இதையடுத்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

அந்தவகையில் முன்னணி நடிகைகளுடன் நடித்து வரும் தனுஷ் 13 வருடங்களாக நயன் தாராவை ஒதுக்கியே வைத்து வருகிறார். கடைசியாக 2008ல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படம் யாரடி நீ மோகினி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தனர். அதன்பின் படங்களில் ஜோடி சேரவில்லை.

இதற்கு காரணம் நயன் தாராவின் மார்க்கெட்டும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக அமைவதுதானாம். கடைசியாக தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதியுடன் தான் ஜோடி சேர்ந்தார். பின் படங்களில் இருவரும் நடிக்கவில்லை.

தனுஷ் அந்த படத்தின் போது உங்கள் நடிப்பு பிடிக்கவில்லை என்று கூறியதை மேடையில் கூறி கிண்டலடித்தார் நயன் தாரா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் ஒன்றாக பார்ட்டிக்கு சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.