சுசித்ரா வைத்த மோசமான குற்றசாட்டுகள்.. பதிலடி கொடுத்த தனுஷ்!!

Dhanush Actors Suchitra Tamil Actors
By Dhiviyarajan Jul 07, 2024 06:31 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

கடந்த 2016ம் ஆண்டு சுசீ லீக்ஸ் என்ற பெயரில், நடிகர் நடிகைகளின் சில அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சுசித்ரா, சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் மீது பல குற்றச்சாற்றுகள் முன் வைத்தார்.

சினிமா பிரபலங்களின் விவகாரத்துக்கு தனுஷ் தான் காரணம் என்று ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வந்துகொண்டு இருந்தது.

இந்நிலையில் ராயன் படத்தின் ஆடியோ லான்சில் தன் மீது வந்த விமர்சனங்களுக்கு தனுஷ் பதிலடி கொடுத்து இருக்கிறார் . அதில் அவர் கூறியதாவது, நான் யார் என்று எனக்கு தெரியும், என்னுடைய அம்மா அப்பாவுக்கு தெரியும், என் பசங்களுக்குத் தெரியும், எனது ரசிகர்களுக்கும் தெரியும்.

நான் தொடக்கத்தில் இருந்தே அதிகமாக பாடி ஷேமிங்கிற்கு ஆளானவன், தேவையில்லாத வதந்திகள், கெட்டப் பெயர் எனப் பல இருந்தாலும் இப்படி உங்கள் முன்னாள் நிக்க காரணம் நீங்கள் தான் என்று தனுஷ் ரசிகர்களை பார்த்து கூறியுள்ளார். தன்னைப் பற்றிய அவதூறு கருத்துக்கள் எல்லாம் வெறும் வதந்தி என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.   

சுசித்ரா வைத்த மோசமான குற்றசாட்டுகள்.. பதிலடி கொடுத்த தனுஷ்!! | Dhanush Reply To Suchitra Controversy Talk