சிவகார்த்திகேயனிடம் அந்த விசயத்தில் தோற்றுப்போன தனுஷ்.. குருவுக்கே இந்த நிலைமையா....
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை தனுஷ். சமீபத்தில் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படத்தில் கடைசி 20 நிமிடம் கிளைமேக்ஸ் காட்சிகள் என்று சிறு நேர நடிகராக நடித்துள்ளார்.
இப்படத்தின் பிரமோஷனுக்காக கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியிருந்தார். அந்நிகழ்ச்சியின் போது தன் மகன்கள் யாத்ரா, லிங்கா இருவரையும் அழைத்துகொண்டு போட்டோஷூட்டும் எடுத்து மகிழ்ந்தார்.
சமீபத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் திருச்சிற்றம்பலம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இப்படத்திற்காக தனுஷ் வெறும் 15 கோடி சம்பளம் தான் பெற்றுள்ளாராம்.
சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தி அழகு பார்த்த தனுஷ் இவ்வளவு தான் சம்பளம் வாங்குகிறாரா. சிவாகர்த்திகேயனே 25 கோடி சம்பளத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறாரே என்று தனுஷ் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.