விஜய்யை தொடர்ந்து சொகுசு கார் பிரச்சனையில் நடிகர் தனுஷ்! இத்தனை லட்சமா?

vijay dhanush highcourt
By Edward Aug 04, 2021 05:00 AM GMT
Edward

Edward

Report

கடந்த மாதம் நடிகர் விஜய் வாங்கிய வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்கப்பட்டு அதை கட்ட தடை கோரி வழக்கு பதிவிட்டிருந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விஜய்யை விமர்சித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், விஜய்யை தொடர்ந்து நடிகர் தனுஷ் 2015ல் வாங்கிய சொகுசு காருக்கு ரூபாய். 60.66 லட்சம் வரி செலுத்த வணிக வரித்துறையினர் உத்தரவுவிட்டனர். இதையடுத்து வரி விலக்கு கேட்டு உயர் நீதிமன்ற சென்னை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கால் 2016ல் ரூபாய். 30.33 லட்சம் வரி செலுத்தியதாக தனுஷ் கூறியதாலும், அப்போது தனுஷின் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் தற்போது வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது என்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.