19 ஆண்டு திருமண வாழ்க்கை, தினமும் சண்டை!! தனுஷின் அக்கா சொன்ன விஷயம்..

Dhanush Selvaraghavan Kasthuri Raja Actors Tamil Actors
By Dhiviyarajan May 24, 2024 04:30 AM GMT
Report

கோலிவுட், பாலிவுட், தாண்டி ஹாலிவுட் பக்கமும் சென்றுவிட்டார் தனுஷ். ஒரு பக்கம் இயக்கம் மறுபக்கம் நடிப்பு என்று பிஸி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

தனுஷின் அக்கா கார்த்திகா ஒரு பிரபலமான மகப்பேறு மருத்துவர் என்பது பலருக்கும் தெரியும். இவர் மருத்துவர் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

19 ஆண்டு திருமண வாழ்க்கை, தினமும் சண்டை!! தனுஷின் அக்கா சொன்ன விஷயம்.. | Dhanush Sister Karthika Post Get Viral

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் கார்த்திகா, தங்களின் 19வது திருமணம் நாளை முன்னிட்டு கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், திருமணமாகி 19 ஆண்டுகள் மற்றும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தது 26 ஆண்டுகள். நமக்கு இடையே ஒரு நாள் கூட சண்டை இல்லாமல் போனது இல்லை. நம் சண்டைகள் இல்லாமல் நான் இல்லை என்பதை புரிந்து கொண்டேன் என்று கார்த்திகா பதிவிட்டு இருக்கிறார். தற்போது கார்த்திகாவின் பதிவுக்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த பதிவு.