விஜய் சேதுபதி படத்தை காப்பி அடித்த்தாரா தனுஷ்! டிரைலரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

dhanush vijaysethupathi junga jagamethandiram
By Edward Jun 01, 2021 10:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை அதுவும் விருது வாங்கக்கூடிய படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

பேட்ட ரஜினிகாந்தின் தாடியை போலவும் ஸ்டைலாக அவரின் சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அள்ளித்தருகிறது. பக்கா தியேட்டர் படமாக உருவாகியிருக்கும் இந்த படம் ஓடிடியில் வெளியாவது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை தந்துள்ளது.

இந்நிலையில் ஜுன் 1 அன்று ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியிட்டது அப்படக்குழு. டிரைலர்கள் மற்றும் டீசர்கள் போன்றவை வந்தால் அவற்றை வேறு ஒரு படத்துடன் ஒப்பிட்டு கண்டுபிடித்து போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்படி ஜகமே தந்திரம் படத்தின் டிரைலரையும் ஜூங்கா படத்துடன் ஒப்பிட்டு கூறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா படத்தின் கதைக்களம் போல இருக்கிறதே என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். படத்தின் டிரைலர் டீசரை பார்த்து எதையும் எடைபோடக்கூடாது என்றும் கூறி வருகிறார்கள்.