செல்வராகவனின் படத்தை பார்த்து காரி துப்பிய பிரபல நடிகரின் மகன்.. யார் தெரியுமா அது?
தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான படங்களை இயக்கி பிரபல இயக்குனராக உயர்ந்தவர் செல்வராகவன் . இவர் தனுஷ் நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான "துள்ளுவதோ இளமை" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இதையடுத்து பல படங்களை இயக்கி வந்த இவர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் "பகாசுரன்" திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர். இப்படத்தை இயக்குனர் மோகன் ஜி இயக்கியிருந்தார்.

காரித் துப்புவார்கள
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற செல்வராகவனிடம் தொகுப்பாளர், 'உங்கள் படத்தை தனுஷின் மகன்கள் விமர்சனம் செய்வார்களா?' என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த அவர், " தனுஷின் மகன்கள் யாத்ரா, லிங்கா இரண்டு பெரும் தான் உண்மையான விமர்சகர்கள். அவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் திரைப்படம் மோசமாக இருக்கிறது என்று ஓப்பனாக சொல்லிவிடுவார்கள். சில சமயங்களில் என் படத்தை பார்த்து காரித் துப்புவார்கள" என்று கூறியுள்ளார்.
